மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா வாவிப்பகுதியில் இருந்து இன்று திங்கட்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்க்கப்பட்டவர் காயங்குடா, கன்னனன்குடா பகுதியை சேர்ந்த கணபிள்ளை சிவகுரு (67வயது)என அடையாளங்காணப்பட்டுள்ளதாக வவுனதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இவருக்கு தொய்வு ஆஸ்துமா நோய் இருந்ததாவும் இவர் ஆற்றில் தோணியில் சென்று மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது அந்த நோய் ஏற்பட்டு ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என வவுனதீவு பொலிஸார் தெரிவிதடதனர்.
இது தொடர்பிலான விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.












