(கிருஸ்ணா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம், கல் தயாரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள திண்மக்கழிவு அகற்றும் செயற்பாடுகளில் ஏற்பட்டு பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான தொழில்நுட்பத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை அரசின் வேண்டுகோளின் அடிப்படையில் மலேசிய தொழில்நுட்ப குழுவினர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர்.
குழுவினசூற்றாடல் பாதுகாப்பு அமைச்சும் மலேசியாவும் இணைந்து செயற்படுத்தவுள்ள இச்செயற்திட்ட தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பதில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எம்.சிவகுமார், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், மட்டு மாநகர ஆணையாளர் எஸ்.சிவநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சினையாக திண்மக்கழிவு அகற்றல் உள்ளது. நாளாந்தம் மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளில் 14 மெற்றிக் தொன், மட்டக்களப்பு மாநகர பிரதேசத்தில் 5 தொன் கழிவும் சேகரிக்கப்படுகிறது.
இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகள் தொடர்பான சரியான முகாமைத்துவம் கையாளப்படுவதில்லை. இதனால் மட்டக்களப்பில் சூழல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.
இதனைச் சீர்செய்யும் நோக்கில் சூற்றாடல் பாதுகாப்பு அமைச்சும் கிழக்கு கழிவுக்கான சக்தி நிறுவனம் ஆகிய ,இணந்து இச்செயற்திட்டத்தினை செயற்படுத்தவுள்ளன.
இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான மேலதிக மின்சாரத்தை பெறமுடிவதுடன் திண்மக்கழிவுகளை அகற்றுவதற்கான தீர்வும் பெற்றுக்கொள்ளமுடியுமென பதில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எம்.சிவகுமார் தெரிவித்தார்.