(கிருஸ்ணா)
மட்டக்களப்பு மாவட்ட தேசிய உயர் தொழில்நுட்பக்கல்லூரியின் கணிணி நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு,ஆரையம்பதியில் உள்ள கல்லூரியில் நீண்டகாலமாக நிலவி வந்த கணிணி நிலையத்தின் தேவைப்பாடினை உணர்ந்து உயர்கல்வி அமைச்சு இதற்கான கணிணிகளை வழங்கியிருந்தது.
தேசிய தொழில்நுட்பக்கல்லூரியின் கல்விசார் இணைப்பாளர் செல்வரத்தினம் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயர்கல்வி பிரதியமைச்சர் நந்திமித்திர ஏக்க நாயக்க கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
அத்துடன் தேசிய உயர் தொழில்நுட்பக்கல்லூரியின் இணையத்தளத்தினையும் பிரதியமைச்சர் இதன்போது ஆரம்பித்துவைத்தார்.
கடந்த பல காலமான தொழில்நுட்ப ரீதியான பட்டதாரிகளை உருவாக்கிவரும் இந்த கல்லூரியில் கணிணி தொழில் நுட்ப பயிற்சிக்காக மாணவர்கள் மட்டக்களப்பு நகருக்கு சென்றுவரவேண்டிய நிலையிருந்தது.
இந்நிலையில் அண்மையில் இங்கு விஜயம் செய்த உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இதற்கான கணிணிகள் வழங்கப்பட்டன.
அத்துடன் முன்னாள் முதலமைச்சரும் கிழக்க மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தனும் இதற்கென ஒரு தொகுதி கணிணிகளை வழங்கியிருந்தார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












