(கிருஸ்ணா)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனையில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பபெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை காலை வீரமுனை 02ஆம் வட்டாரம், வழிப்பாட்டுப்பிள்ளையார் ஆலய வீதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி பிரேமராஜினி(27வயது)என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டதுடன் சம்மாந்துறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையை தொடர்ந்து உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
குடும்ப பிரச்சினை காரணமாகவே குறித்த பெண் தூக்கில் தொங்கி தற்கொலைசெய்துகொண்டுள்ளதாகவும் குறித்த பெண்ணுக்கு ஆறு மாத கைக்குழந்தையும் உள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.