கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் படையெடுக்கும் மயில்கள்

(கிருஸ்ணா)

அந்திமாலைப்பொழுது வேளைகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வரும் மயில்கள் வயல் நிலங்களில் விளையாடி மகிழ்வதைக்காணக்கூடியதாகவுள்ளது.

நூற்றுக்கனக்கான மயில்கள் அம்பாறை மாவட்டத்தின் சொறிக்கல்முனை,சவளக்கடை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி,மண்டூர் வயல்களில் இந்த விளையாடி மகிழ்கின்றன.

எனினும் இவற்றினால் தமது வயல் நிலங்களில் வேளான்மை பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் மாடுகள்,ஆடுகள்,யானைகள் கூட்டமாக வந்து விவசாயத்தை அழிக்கும் காலம் சென்று இன்று மயில் கூட்டமாக வந்து தமது விவசாய நிலங்களை அழிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.