சிரேஷ்ட ஊடகவியலாளரும் காத்தான்குடி பஸ் டிப்போவின் முகாமையாளருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம்.பSழுழ்ழாஹ் அவர்களின்மரணச் செய்தி கேட்டு நான்ஆழ்ந்த கவலையும் அனுதாபமும் அடைகின்றேன். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, மக்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனதுஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எல்லாம் வல்லஅல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற மேலான சுவனபதியை வழங்குவானாக.
கௌரவ எம். எல். ஏ. எம். ஹிஸ்புழ்ழாஹ்(MP)
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர்
சிரேஷ்ட ஊடகவியலாளர் பலுழுழ்ழாஹ் அவர்களின் மரணச் செய்தி என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது---கிழக்குமண் பிரதம ஆசிரியர் ரீ.எல்.ஜவ்பர்கான்
சிரேஷ்ட ஊடகவியலாளரும் காத்தான்குடி இ.போ.ச பஸ் டிப்போவின் முகாமையாளருமான ஏ.எல்.எம். பலுழுழ்ழாஹ் அவர்களின் மரணச் செய்தி கேட்டு, நான் பேரதிர்ச்சியடைந்ததுடன் ஆழ்ந்த கவலையும், அனுதாபமும் அடைகின்றேன். அவரின் இழப்பு நமது மண்ணுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
மிகச்சிறந்த ஊடகவியலாளராக நிர்வாகியாக சிறந்த பேச்சானராக நல்லகுடும்பத்தலைவாராக அரசியல் செயற்பாட்டாளராக பல பரிமானங்களுடன் வாழ்ந்த பழுலுல்லாஹ்வின் மரணம் பெரும் இழப்பாகும.புனிதமான அல்குர்ஆனை ஓதுவதிலேயே அதிக நேரத்தை செலவிடும் பழுலுல்லவாஹ் அவர்கள் மிகச்சிறந்த இறைவிசுவாசியாவார்.;
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, மக்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாம் வல்லஅல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற மேலான சுவனபதியை வழங்குவானாக.
ரீஎல்.ஜவ்பர்கான்
சுதந்தி ஊடகவியலாளர்
கிழக்குமண் பிரம ஆசிரியர்












