மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்டக் குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்.



(யு.கே.காலித்தீன்)
 கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அவர்களின் அழைப்பின்பேரில் இலங்கை வந்துள்ள மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மலேசியாவின் முதலாவது இந்திய முஸ்லிம் காங்கிரஸின் செனட்டருமான செய்யத் இப்ராஹிம் பின் காதர், அக்கட்சியின் செயலாளர் நாயகம் அமீர் ஹம்சா பின் அப்துல் ரஜாக் மற்றும் அன்வர் சதாத் பின் முஸ்தபா உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினர் நேற்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களை திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.


அதன் பின்னர் கிம்மா உயர்மட்டக் குழுவினர் தங்களது கட்சி சார்பில் இயங்கும் கூட்டுறவு அமைப்பினால் மலேசியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கோழிப் பண்ணை தொடர்பாக ஆராயும் பொருட்டு மாகாணசபையின் கால்நடை அபிவிருத்தி அமைச்சால் திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் கோழிப்பண்ணை ஒன்றுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு அப்பண்ணை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண விவசாயத் திணைக்கள, கால்நடை உற்பத்தி, கிராமிய கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் ,  கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ரீ. கே.தவராஜன் கலந்துகொண்டனர்