(கிருஸ்ணா)
மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள முதியவர்களின் நன்மை கருதி மாவேற்குடாவில் மருத்துவ நடமாடும் சேவை நடத்தப்பட்டது.
மாவேற்குடா முதியோர் சங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையினால் இந்த நடமாடும் சேவை நடத்தப்பட்டது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் கு.சுகுணன் தலைமையில் தாதிய பரிபாலகர் சிவா,தாதிய உத்தியோகத்தர் சித்தார்த்தன் உட்பட பலர் இந்த வைத்திய முகாமில் சேவையாற்றினர்.
இதன்போது போரதீவுப்பற்று பிரதேசத்தில் இருந்து சுமார் 200 முதியோர்கள் கலந்துகொண்டு மருத்துவ சேவைகளைப்பெற்றுக்கொண்டனர்.
இந்த மருத்துவ நடமாடும் சேவையானது முதியோருக்கு மட்டுமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












