தனியார் துறை பங்களிப்புடனான அபிவிருத்தி முயற்சிக்கான ஒரு நாள் செயலமர்வொன்று 24.11.2012 சனிக்கிழமை திருகோணமலை உவர்மலை வெல்கம்பே ஹோட்டலில் காலை.9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரையும் நடை பெற்றது.
கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ.எம் ஹூசைன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக விவசாய கால் நடைஉற்பத்தி அபிவிருத்தி கிராமிய கைத் தொழில் மீன் பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் வியாபாரப் பிரமுகர்கள்,பொருளாதார அபிவிருத்தி விசேட ஆலோசகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.












