விருச்சிகம்
விருச்சிகம்:எதிரிகள் உதிரி ஆவார்கள்
எல்லோரிடமும் கண்டிப்பும் கறாருமாக இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர். துணிச்சலுக்கும் தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர். இந்த ஆண்டில் உங்களின் களத்திர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உடல் சோர்வு முற்றிலும் மறையும். வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருக்கவும். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சில சமயம் சதி வேலைகளில் ஈடுபடலாம். ஆனாலும் கலங்க வேண்டாம். துர்க்கைஅம்மனை தொடர்ந்து வழிபட்டால், எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள். யாராக இருப்பினும் நன்கு யோசித்த பிறகே வாக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் ஏற்படாது. தர்ம காரியங்களைச் செய்வீர்கள்.
இந்த ஆண்டு ரணருண ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் கடினமான சூழ்நிலைகளிலும் உங்களின் தனித் தன்மையை இழக்க மாட்டீர்கள். அடுத்தவர்கள் உங்களுக்கு அறிவுரை கூறும்படி நடந்து கொள்ளமாட்டீர்கள். அரசாங்கத் தொடர்புகள் உங்களுக்குச் சாதகமாகவே அமையும். நீண்ட தூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். கடுமையாக உழைத்துச் செய்யும் காரியங்களில் வெற்றிவாகை நிச்சயம். கேது பகவான் தார்மீகச் சிந்தனைகளை மேலோங்கச் செய்வார். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியோரைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது. இதுநாள் வரை உடலில் இருந்த சோர்வும் அயர்ச்சியும் மறையும். தேக ஆரோக்யம் சீராக மாறும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும்.
தாயார் வழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் மறைந்து, சுமுகமான உறவு உண்டாகும். குடும்பத்திலும், உற்றார் உறவினர்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். எனினும் ஏழரை நாட்டு சனி பகவான் சமூகத்தில்
நலிவடைந்தவர்களுக்கு சேவை செய்து புண்ணியம் ஈட்டும் வாய்ப்பையே வழங்குவார். இதனால் தன்னலம் பார்க்காமல் உழைத்துப் புகழடைவீர்கள். உங்கள் உடலுழைப்புக்கு மேல் பன்மடங்கு லாபம் கிடைக்கும். கல்வி, கேள்விகளிலும் சிறந்து விளங்குவீர்கள். உத்யோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள்;
ஆனால், சக ஊழியர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு சரியாகச் செய்வது அவசியம். வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். அதேநேரம் வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் உங்கள் கைக்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்படும் என்பதால் புதிதாக யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும். அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும் புகழும் உயரும். சக கலைஞர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளை எளிதில் அடைவீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல்நலத்தில் மட்டும் சற்று கவனமாகவே இருக்கவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்க வழி வகையுண்டு. தியானம் பழகுங்கள். தினமும் உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
பரிகாரம்:
தொடர்ந்து செவ்வாய்க்கிழமையில் துர்க்கையம்மனை வழிபடவும். நவகிரக வழிபாடு நன்மை தரும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
துர்கா ஸஹஸ்ரநாமம் மற்றும் துர்கா ஸூக்தம் சொல்லுங்கள்.
மலர் பரிகாரம்:
செம்பருத்தி மலரை அம்மனுக்கு ராகு காலத்தில் சாத்தி வர மனதில் தைரியம் பளிச்சிடும்.