சிம்மம்
சிம்மம்:குடும்பத்தில் குதூகலம் பிறக்கும்‘‘சிம்மத்தானோடு சிணுங்கேல்’’ என்பதற்கேற்ப உங்களிடம் யாராவது வம்பிழுத்தால் அவ்வளவு தான், உடனே சிங்கம் பிடரியை சிலுப்பி எழும்புவது போல எழுந்து விடுவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். இந்த ஆண்டு குருபகவான் உங்களின் தொழில் ஸ்தான ராசியிலும் லாபஸ்தானத்திலும் சஞ்சரிப்பது சிறப்பு. இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள்.
குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும் பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடிவரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும். மன அழுத்தம் குறையும். மனம் தெளியும். ஆன்மிகத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருப்பதால் புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். உங்கள் தைரிய ஸ்தானத்தில் சனியுடன் அமர்ந்த ராகு பகவான், உங்கள் சகோதர வழியில் சில
அனுகூலங்களை உண்டாக்குவார். நண்பர்களிடம் மன உறுதியுடன் தெளிவாகப் பேசுவீர்கள். உங்களைப் பற்றிப் புறம் பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து நாசூக்காக விலகி விடுவீர்கள்.
கையிருப்புப் பொருட்களையும் பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். மேலும் குறுக்கு வழியில் எந்தச் செயலையும் செய்ய நினைக்க வேண்டாம். இந்த ஆண்டு பாக்கியஸ்தான ராசியில் கேது பகவான் சஞ்சரிப்பதால் உறுதியான எண்ணத்துடன் பணியாற்றுவீர்கள். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில்
நன்றாகவே முன்னேறுவீர்கள். சிலருக்கு நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் சூழ்ச்சிகளில் சிக்கும் சூழல் ஏற்படலாம். ஆனாலும் முருகக் கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டு விடுவீர்கள். அரசாங்கம் வாயிலாக சிறு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவை விரைவில் மறைந்துவிடும்.
வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். இக்காலகட்டத்தில், உங்களை கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வைப்பார் சனி பகவான். நெடு நாளைய பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். நிலையான புகழும் பெருமையும் அடைவீர்கள். இதனால் நீங்கள் புதிய அனுபவங்களைப்
பெறுவீர்கள். உங்கள் மன வலிமை அதிகரிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களிடம் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்ப்பங்களில் கால தாமதம் ஏற்படலாம்; உடலில் சோர்வும், மனதில் தெளிவின்மையும்கூட உண்டாகலாம்.
ஆனால் இவற்றை மீறி கர்ம ஸ்தானத்தில் உள்ள கேது பகவான், உங்களுக்கு கௌரவமான பதவிகளை வழங்குவார். வியாபாரிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் விளை பொருட்களால் லாபத்தை அள்ளுவீர்கள். நீர்ப்பாசன வசதிகள் பெருகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே
பெறுவீர்கள்.
உழைப்பை அதிகப்படுத்தினால் வெற்றிகள் குவியும். பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.
பரிகாரம்:
தினமும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
த்ரியம்பகம் என்று ஆரம்பிக்கும் ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்:
செந்தாமரை மலரை அம்பாளுக்கு சாத்திவர தீமைகள் அகலும்..












