கடகம்
கடகம்:பயணங்களால் பலன் உண்டுஎதிலும் துடிப்புடனும் ஈடுபாட்டுடனும் இயங்கும் கடக ராசி அன்பர்களே, எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் நீங்கள். உங்கள் கடமையிலும் காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள். கொஞ்சம் சந்தேகப்புத்தி
உடையவர்கள். இந்த ஆண்டு, உங்களின் லாபஸ்தான ராசியிலும் விரயஸ்தான ராசியிலும் சஞ்சரிக்கிறார், குரு பகவான். இவர் செல்வச் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தருவார். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து விவகாரங்களில் நிலவிய வில்லங்கம் விலகும்.
சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளையும் பெறுவீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்களை மூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து செயல்பட வைப்பார். சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு பலருக்குக் கிடைக்கும்.
இந்த ஆண்டு உங்களின் சுகஸ்தான ராசியில் சனியுடன் ராகு பகவான் சஞ்சரிப்பதால், உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். உங்களின் நெருங்கிய நண்பர்களே உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். இதனால் மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதிருங்கள். கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் ஏற்படாது. செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் எதிர் கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில்
நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள்.
குரு பகவானின் கனிந்த பார்வை கிடைக்கப்பெறும். தைரியவீர்ய ஸ்தானத்திலிருந்து உங்களின் நடை, உடை, பாவனைகளில் அழகை உண்டாக்குவார். சிலருக்கு நூதன வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும்.
தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். அதேநேரம் கால்நடைகளுக்கு சற்று கூடுதலாக செலவு செய்ய
நேரிடும். மற்றபடி புழு, பூச்சிகளால் பயிர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது. அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அதேசமயம் கட்சியில் முக்கியப் பிரமுகர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம்.
கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனச் சலனங்களில் இருந்து தப்பிக்க தியானம் பழகுங்கள். மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
தினசரி 108 முறையாவது ராம நாமத்தை ஜபிக்கவும். தமிழிலோ, வட மொழியிலோ சுந்தர காண்டம் பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்:
மல்லிகை மலரை சிவனுக்கு பிரதோஷ வேளையில் சாத்திவர குழப்பங்கள் அகலும்.
.












