கோப்பாவெளியில் மினி சூறாவளி வீடுகள் சேதம்!


(தீரன்)
ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கோப்பாவெளி பிரதேசத்தில் நேற்றிரவு வீசிய மினி சூறாவளியால் வீடுகள் சிலவும் பொதுக்கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

நேற்றிரவு கோப்பாவெளி பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளியால் ஐந்து வீடுகளும், இரண்டு பலநோக்கு கூட்டுறவு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதுடன் ஆலயம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

இதேநேரம் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் தொடர் மழைகாரணமாக கோப்பாவெளி பிரதேசத்திற்கான பாதை வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொது மக்கள் அசௌகரியங்களையும் சந்தித்துள்ளனர்.