தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் விருதுவழங்கும் விழா


(கிருஸ்ணா)

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் விருதுவழங்கும் விழா இன்று புதன்கிழமை கல்லடி,துளசி மண்டபத்தில் இடம்பெற்றது.

இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் அனுசரனையுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இந்த நிகழ்வை ஏற்பாடுசெய்திருந்தது.


மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் தலைவர் சசிகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டனர்.

அத்துடன் சிங்கள பிரபல நடிகர் மற்றும் நடிகை, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் தவராசா, மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் கலாராணி, காத்தான்குடி பிரதேச செயலாளர் நஸிர், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,ஊடக இணைப்பாளர் ஜீவானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ரீதியில் இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் கழகங்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.