திருச்செந்தூரில் பாதுகாப்பான புலம் பெயர்வு தொடர்பான பயிற்சிப் பட்டறை.


 (உ.உதயகாந்த்)

தாய் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு அல்லது இன்னொரு நாட்டிற்கு சட்ட விரோதமாக புலம் பெயர்தலும், சட்ட விரோத மீன்பிடியை நிறுத்தி எமது மீன் வளத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பான பயிற்சிப் பட்டறையானது கடந்த 21.12.2012ஆம் திகதி திருச்செந்தூர் பல் தேவைக் கட்டிடத்தில் பொது மக்கள் நலன்சார் அமைப்புக்களான கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், இளைஞர் கழகம், ஐக்கிய மக்கள் சமுக அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்களை உள்ளடக்கி முழு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.

நிகழ்வில் அதிதியாக திருச்செந்தூர் கிராம உத்தியோகத்தர் கலந்து கொண்டதுடன் அம்கோர் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அத்துடன்  வேலை வாய்ப்பிற்காக அல்லது வேறு நோக்கத்திற்காக வெளிநாடு செல்லும் நபர்களுக்கு ஏற்படும் உயிர் ஆபத்துக்கள், உடமைகளை இழக்க நேரிடுவது, குடும்ப பாதிப்புக்கள், சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகுதல் மற்றும் பாதுகாப்பான முறையில் எவ்வாறு புலம்பெயர்வது என்பன தொடர்பான வினோத செயற்பாடுகளுடனான  பயிற்சியினை திறம்பட நடாத்தியதுடன் நாற்பதிற்கு மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற்றதுடன் கலந்து கொண்ட அனைவருக்கு அம்கோர் நிறுவனத்தினால் உலர் உணவுப் பொதியொன்றும் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.