(கிருஸ்ணா)
பெரும் மழைக்கு மத்தியிலும் கிறிஸ்மஸை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களினால் கோலாகலமான முறையில் ஒளிவிழா நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்;டுவருகின்றன.
மட்டக்களப்பு புளியந்தீவு தூய மரியாள் பேராலயத்தின் மறைப்பாடசாலையின் ஒளிவிழா சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
தூய மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை மொறாயஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப்,மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் உயர் நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மறைப்பாடசாலை மாணவர்களின் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் ஜேசு பிறப்பை நினைவூட்டும் நிகழ்வுகளும் இடம்பெற்றது.
ஆத்துடன் பல்வேறு மறை பரீட்சைகளில் தேசிய,மாகாண மட்டக்களில் சாதனை பரிட்சைகளில் சாதனைபடைத்த மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












