அகில இலங்கை பகவான் சத்திய சாயி சேவா நிறுவனங்களின் கிழக்குப்பிராந்திய இணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நேற்றுக் காலை மட்டக்களப்பு கல்லடி பகவான் சத்தியசாயிபாவா சேவா நிலையத்தில் வருடாந்த இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
இவ் இரத்தானத்தில், மட்டக்களப்பு, கல்லடி, ஆரையம்பதி, வந்தாறுமூலை, தாமரைக்கேணி சாய நிலையங்களைச் சேர்ந்த அங்கத்தவர்க்ள இரத்தம் வழங்கினர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியினர் இரத்தங்களைப் பெற்றுக் கொண்டனர்.
வருடாவ ருடம் அகில இலங்கை பகவான் சததியசாயி சேவா நிறுவனங்களின் கிழக்குப்பிராந்திய இணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இவ் இரத்ததானம் நடைபெறுவது வழக்கமாகும்.