மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மிகவும் பின்தங்கிய அடிப்படை வசதிகள் குறைவான, கல்வி நிலையில் பின்தங்கிய குடியேற்ற கிராமமாகிய கரடியன் குளம் கிராமத்தில் வாழ்கின்ற மக்களின் தேவைப்பாடினை அறிந்த செங்கலடி பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய உ.உதயசிறீதர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு ஆர்.கங்காதரன் அவர்களின் வழிகாட்டலுடன் டென்மார்க் 'அன்னை அறக்கட்டளை' அனுசரனையுடன் விறைட் பியுச்சர் அமைப்பின் சமுக அனர்த்த ஒருங்கிணைப்பாளர் அ.ரஜிகாந்த் தலைமையில் அண்மைக்காலமாக பெய்துவரும் மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்வானது 2012.12.27 ஆம் திகதி கரடியன் குளம் கிராம பாலர் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் கரடியன் குளம் வாழ் மக்கள் தேவையறிந்து மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் , கற்பிணித் தாய்மார்களுக்கும் மூன்று வயதுக்குட்பட்ட பிள்ளைகளுமுள்ள குடும்பத்தினர்களுக்கும், குடும்பஸ்தர்களுக்குமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் ஆயிரத்தி அறுநூறு பெறுமதி மதிக்கத்தக்க நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
நிகழ்வில் இப் பிரதேசத்திற்கு பொறுப்பான பட்டதாரிப் பயிலுனர் திருமதி ராஜி அவர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், விறைட் பியுச்சர் அமைப்பின் அமைப்பாளர் திரு ஜனனன் மற்றும் அமைப்பின் தலைவர் கிருஸ்ணராஜ் , உப தலைவர் திரு உ.உதயகாந்த், கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு திவாகரன் , விளையாட்டு மற்றும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் திரு ஜோன்சன், விறைட் பியுச்சர் அமைப்பின் முக்கியஸ்தர்களும், கரடியன் குளம் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்க தலைவரும் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்தார்கள்.
இச் சந்தர்ப்பத்தில் தரம் 6 கல்வி கற்பவராக மதிக்கத்தக்க மாணவன் ஒப்பமிடத் தெரியாமையினால் கைவிரலடையாளம் இட்ட சம்பவம் அனைவருக்கும் மிகவும் மன வேதனையை உண்டுபண்ணக் கூடியவாறாக அமைந்ததும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.













