(சித்தா)
கிழக்கு மாகாணத்தின் விரைவாக கல்வியில் வளர்ந்து கொண்டு வருகின்ற பாடசாலையாக மூதூர் கல்வி வலயத்தின் அல் ஹய்றியா பாடசாலை விளங்கி வருகின்றது. பிள்ளைநேயப் பாடசாலையின் அனைத்துப் பண்புகளையும் கொண்டு விளங்குகின்ற இப் பாடசாலை அண்மையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற மாணவர்களை கௌரவித்து பாராட்டியமை இப் பாடசாலையின் விருத்தியினை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
அதிபர் திருமதி.எம்.கரீம் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் பிரதம விருந்தினராக முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ எம்.எஸ்.எம் அமீரலி அவர்களுடன் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் கௌரவ சுபைர் அவர்களும் கலந்து விழாவினைச் சிறப்பித்தனர்.
இவ் விழாவானது அதிதிகளின் வரவேற்புடன்; கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. நிகழ்வில் மாணவர்களின் கலை நிழ்வுடன்; தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற மாணவர்களை கௌரவித்தலும் இம் மாணவர்களை பரீட்சைக்கு வழிகாட்டிய ஆரம்பக் கல்வி ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர். தரம் 5 இல் அயராது உழைத்து மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்ட ஆசிரியர் திரு.கே.எம்.நவாஸ் என்பவர் விசேடமாக பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.












