(கிருஸ்ணா)
மட்டக்களப்பு சோட்டோ கான் கராத்தே கழகத்தின் மாவட்ட சாதனையாளர் பாராட்டு விழா மட்டக்களப்பு வின்சன் பெண்கள் உயர்தரத் தேசியப்பாடசாலை மண்டபத்தில் கழகத்தின் தலைவரும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப் பணிப்பாளருமான பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
இந நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.
கெரளவ அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஸ்ர பிரதி செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை பகல் நடைபெற்ற இந் நிகழ்வில், மாகாண விளையாட்டுப் போட்டிகளில் கராத்தே துறையில் வெற்றிபெற்றவர்கள். தேசிய ரீதியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்.
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கராத்தே போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்றவர்கள், தேசிய ரீதியில் கலை நிகழ்ச்சிகளில் பாராட்டுப் பெற்றவர்கள், சாரணிய ஜனாதிபதி விருது பெற்றவர்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
வருடா வருடம் நடத்தப்பட்டு வரும் சோட்டோகான் கராத்தே கழகத்தின் சாதனையாளர் கௌரவிப்பு விழாவில் கடந்த வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச சாதனையாளர் விருது இவ்வருடம் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடிப் போட்டியில் இலங்கை அணியில் பங்குபற்றி சாதனை படைத்த மதன் சிங் மற்றும் ரி. மதன் ஆகியோருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது .