(தீரன்)
அண்மையில் கோப்பாவெளியில் ஏற்பட்ட மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதேச செயலகத்தினால் கூடாரங்கள்(டென்ட்) வழங்கப்பட்டன.
அண்மையில் கோப்பாவெளியில் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக வீடுகள் சேதமடைந்து கோப்பாவெளி பாடசாலையில் தங்கியிருந்த குடும்பங்களை நேற்றைய தினம் (23.12.2012) நேரில் சந்தித்த பிரதேச செயலாளர் திரு. உ. உதயசிறிதர் அவர்கள் பாதிக்கப்பட்ட 08 குடும்பங்களுக்கு வீடுகளுக்கு மேல் விரிப்பதற்கான கூடாரங்களை(டென்ட்) வழங்கிவைத்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுடைய மேலதிக தேவைகளை கேட்டறிந்ததுடன் சேதமடைந்த வீடுகளுக்கான அரச கொடுப்பனவை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


















