ஆலையடிவேம்பு கவடாப்பிட்டி பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்.


(வி.சுகிர்தகுமார் & உதயகாந்த் )
அம்பாரை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்  P.H.பியசேன அவர்களின் மேற்பார்வையின் கீழ் லகுகல பிரதேசத்தின் பரணகொபிபொல மற்றும் ஆலையடிவேம்பு கவடாப்பிட்டி ஆகிய இரு பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்கள் நேற்று நடைபெற்றது. இதன்போது இனங்காணப்பட்ட முக்கிய தேவைகளான பஸ் போக்குவரத்து வீதி அபிவிருத்தி நீர்ப்பிரச்சினை ஆகியவற்றுக்கான தீர்வுகள் உடன் பெற்றுத் தருவதாக பாரளுமன்ற உறுப்பினர் உறுயளித்ததுடன் மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில் பாரளுமன்ற உறுப்பினரின் செயலாளர் T.ஜெயாகர் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.