பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம் நடாத்திய ஒளி விழா


(சித்தா)
இருளின் வாழும் சனங்கள் வெளிச்சத்தைக்கான ஜேசுகிறிஸ்து அவதரித்தார். இதனை ஒளி விழாவாக இந் நாளில் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த வகையில் பட்டிருப்பு கல்வி வலயம் இன்று (19.12.2012) ஒளி விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடியது. பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்ற இவ் ஒளி விழாவில் ஆரம்ப ஜெபத்தினை பெரியகல்லாறு மாரநாத்தா திருச் சபை போதகர் அருட்.திரு.ஏ.ஜேசுதாசன் அவர்கள் ஏறெடுக்க வரவேற்புரையின் பட்டிருப்பு கல்வி வலய பதவி நிலை உதவியாளர் திரு.ஈ.வடிவேல் நிகழ்த்தினார்.

அடுத்து பட்டிருப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. என்.நாகராசா வேத பாடத்தினை வாசித்தார்;. இறை செய்தியினை களுதாவளை மெதடிஸ்த திருச் சபை போதகர் அருட் திரு. எஸ்.ஜே. உதயகுமார் வழங்கினார்.

இத்துடன் மட்/உதயபுரம் தமிழ் வித்தியாலய மாணவர்களினதும், பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய மாணவர்களினதும் கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றது. இவ் விழாவில் வலயக் கல்வி அலுவலக உத்தியோகஸ்த்தர்கள் கலந்து சிறப்பித்ததுடன் நத்தார் பப்பாவின் வருகையும் சிறப்பிடம்பிடித்திருந்தது.