(உ.உதயகாந்த்)
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாள் நில இடங்களில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடர முடியாது எனும் தருவாயில் பிரதேச செயலாளர் என்ற வகையில் எமது செயலகத்தினால் எவ்வாறான உதவிகளை ஆற்றுவதற்காக ஆயத்தநிலையில் உள்ளோம் என்பதையும் அனர்த்தம் நிகழும் தருவாயில் மக்கள் எவ்வாறான நடைமுறைகளை கையாள வேண்டும் என்பதையும் , இப் பிரதேசத்தில் செயலாற்றிக்கொண்டிருக்கும் தொண்டு நிறுவனங்களும் கிராமிய சங்கங்களும் எவ்வாறாக செயலாற்ற வேண்டும் என்பது பற்றிய முன் ஏற்பாட்டுக் கலந்துரையாடலினை இன்று 2012.12.19 திகதி ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு வே.ஜெகதீசன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
இன் நிகழ்வில் திகாமடுல்லை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பியசேன அவர்களின் செயலாளர் , இராணுவ உயரதிகாரி , பிரதேச சபை தவிசாளர் திரு இரத்தினவேல் மற்றும் கல்வி உயரதிகாரிகளும் கலந்து கொண்டதுடன் அனைத்து தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கிராம உத்தியோகத்தர்களும் , சமுர்த்தி உத்தியோகத்தர்களும் , ஏனைய திணைக்களங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டதுடன் எதிவரும் நாட்களில் வெள்ள அனர்த்தங்கள் நிகழும் வேளையில் தங்களால் எல்லாவிதமான உதவிகளையும் வழங்க தயாராக உள்ளார்கள் எனவும் கூறினார்கள்.












