மட்டக்களப்பு றோட்டரிக் கழகமும் கண்டி கெறிரேஜ் றோட்டரிக் கழகமும் இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் நாளை (19.01.2013) சனிக்கிழமை மட்/வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் காலை 9.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு றோட்டரிக் கழகத்தலைவர் சட்டத்தரணி மு.கணேசராசா அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறும் இம்மருத்துவ முகாமில் கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் இருதய நோய்கள், சிறுவர் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர்கள், பல் வைத்திய நிபுணர்கள் மற்றும் உளவியல் நோய்கள் தொடர்பான நிபுணர்களையும் கொண்ட, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து ஒரு வைத்தியக் குழுவும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலிருந்து ஒரு வைத்தியக் குழுவும் பங்குபற்றவுள்ளனர். வைத்தியர்கள் மற்றும் மருந்துகள் என்பவற்றினை வைத்தியர்களான க.முருகானந்தம் மற்றும் கு.சுகுணன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்குரிய முக்கிய அனுசரணையை வெல்லாவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். கிருஸ்ணகுமார் அவர்களும் பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் E.. சிறிநாத் அவர்களும் வேள்விஷன் நிறுவனத்தின் ADP முகாமையாளர் எட்வின் றனில் அவர்களும் வழங்குகின்றனர்.
வைத்திய பரிசோதையின் பின்னர் மருந்துகள், மூக்குக் கண்ணாடிகள் என்பனவும் இலவசமாக வழங்கப்படும்












