கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி சம்பந்தமாக ஆராயும் மாநாடு விஷேடமாக புதிதாக அமைக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கிழக்கு மாகாண சபைக்கு புதிதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சை கடந்த முப்பது வருடத்துக்குப் பிற்பாடு வழங்கியுள்ளதனால் கிழக்கு மாகாண சுற்றுலாத் துறையின் மூலம் மக்களுடைய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்குரிய வேலைத் திட்டத்தை மேற்கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையின் அபிவிருத்தி தொடர்பில் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஸ அவர்களின் அனுசரனையுடன் கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார்.
2016 ஆம் ஆண்டளவி;ல் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2.5 மில்லியன் என்ற தொகைக்கு அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் நடவடிக்கையில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகமானவரை கிழக்கு மாகாணத்திற்கு அழைத்து வருவதில் இந்த முன்னேற்பாடுகளின் வேலைத்திட்டங்களாகும்.
இது தொடர்பான மகாநாடு நேற்று 23.01.2013 காலை பத்து மணிக்கு திருமலையில் உள்ள சுற்றுலாத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன் , அமைச்சின் ஆலோசகர் சமந்த , திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் ஞானசேகர், இலங்கை சுற்றுலா வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜௌபர், மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட ,நகர, பிரதேச சபைத் தவைவர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், உட்டபட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் போது கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு தடையாகவுள்ள போக்குவரத்து வசதி, மின்சார வசதி , குடிநீர் வசதி, சுகாதார வசதிகள், கடல் பிரதேச சுற்றாடல் சுத்தம் பேணல் , கழிவுப் பொருட்களை அகற்றுதல், ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அத்தோடு மட்டக்களப்பை மையமாக கொண்டு அம்பாறை ,திருகோணமலை மாவட்டங்களை இணைத்து மட்டக்களப்பில் ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சிப் பாடசாலை ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் மட்டக்களப்பு ,பாசிக்குடா, அருகம்பே , நிலாவெளி, போன்ற இடங்களில் சுற்றுலா தகவல் நிலையமொன்றை அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டமை சிறப்பம்சமாகும்.












