ஆலையடிவேம்பில் ''வறுமையற்ற ஓர் இலங்கை'' விழிப்புணர்வு கருத்தரங்கு.



(உ.உதயகாந்த்)                 
    2013 வரவு செலவு திட்டத்தின் கூறப்பட்டவாறு 2015ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆந் திகதி வறுமையற்ற ஓர் இலங்கையாக மாற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட சிந்தனைகளை பிரதேச மட்ட உறுப்பினர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கானது இன்று ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் திகாமடுல்லை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் P.H.பியசேன அவர்கள் தலைமையில் நடைபெற்றது.




இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு வே.ஜெகதீசன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்டீன் , பிரதேச சபை தவிசாளர் க.ரெட்ணவேல், பிரதேச செயலக கணக்காளர் எஸ்.கணகரெட்ணம், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஹசைடீன்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கிருபைராஜா, வங்கிகளின் முகாமையாளர்கள் மற்றும் ஏனைய அரச திணைக்களகங்களின் அதிகாரிகளும் அதிகளாகவும் வளவாளர்களாகவும் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும் இன் நிகழ்வில் பட்டதாரி பயிலுனர்களும், கிராம உத்தியோகத்தர்களும்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், கிராம மட்ட குழுக்களின் தலைவர்களும், பாடசாலைகளின் அதிபர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களும், ஆலய தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும், திவிநெகும திட்டத்தின் பயனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.