ஆரம்ப பாடசாலைக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு


(உதயகாந்த் & வி.சுகிர்தகுமார்)
அக்கரைப்பற்று அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆரம்ப பாடசாலைக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு அதிபர்  P.தனிகாசலம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக இராமகிருஷ்ண தேசிய பாடசாலை அதிபர் ஆ.கிருபைராஜா, பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரீ.ஜெயாகர் உட்பட ஆசியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.