தமிழர் பாரம்பரிய காணிகளை வேறு பிரிவுடன் இணைப்பதை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளேன் -அருண்தம்பி முத்து

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் கிராமங்களைமுஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் இணைப்பதற்கான முயற்சிகளை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பிரதான அமைப்பாளரும் ஜனாதிபதி அவர்களின் இணைப்பாளருமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது,


கோரளைப்பற்று தெக்கைசார்ந்த புணானை மேற்கு மற்றும் வாகனேரி ,
கோரளைப்பற்று வடக்கைசார்ந்த புணானை கிழக்கு, மருதங்கேணிகுளம் கிராமசேவையாளர் பிரிவுகளை முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் கோறளைபற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக அலகுடன் இணைக்க மேற்கொள்ள பட்டுவரும் முயச்சிகளுக்கெதிராக பிரதேச பொதுமக்கள் எனக்கு மனுக்களைஅனுப்பியுள்ளனர் என்பதுடன்,வாகனேரி, புணானை பிரதேசங்களில் வாழ்ந்துவந்த மக்கள் பலர் கடந்தகால
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களை மீள்குடியேற்றம் செய்யும்இத்தருணத்தில், தற்போதுள்ள குடிப்பரம்பல் நிலைமையை மாற்ற எடுக்கும்முயற்சிகள் கண்டிக்கப்படத்தக்கவை. இப்பிரதேசம் புவியியல் ரீதியில் பரந்தநிலப்பரப்பையும், கணிசமான மக்கள் தொகையையும் கொண்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

கோரளைப்பற்று பிரதேசம் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக
வாழ்ந்துவரும் பிரதேசம் என்பது வரலாற்று ரீதியான உண்மையாகும். ஆனால் 1993ம் ஆண்டு முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் பகுதிகளை உள்ளடக்கிகோரளைப்பற்று மேற்கு என்று இன ரீதியில் பிரிக்கப்பட்டது. அதன்பின் 2000ஆம் ஆண்டு கோரளைப்பற்று மத்தி என்று இன்னுமொரு புதிய நிருவாக அலகும்முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்டது. அதேவேளை தமிழ் மக்களுக்காககோரளைப்பற்று தெற்கு, கோரளைப்பற்று (வாழைச்சேனை) என்ற நிருவாக அலகுகள் உருவாக்கப்பட்டன.

 பரம்பரை பரம்பரையாக தமிழ்மக்கள் பெரும்பாண்மையாக வாழும் கிராமசேவையாளர் பிரிவுகளை முஸ்லிம்களின் நிருவாக அலகுடன் இணைப்பதானது தமிழர் குடிப்பரம்பலை மாற்றி முஸ்லிம்களை பெரும்பாண்மை இனமாக மாற்றுவதற்கான ஓர்
முன் முயச்சி என்ற ஐயம் தமிழ்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 1950 களில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு ---அம்பாறை என்று
பிரிக்கப்பட்ட வேளையில், காரைதீவு,கல்முனை மற்றும் அக்கரைப்பற்று போன்றபிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் அடைந்த வரலாற்று துன்பங்கள்
மறக்கப்பட முடியாதவை.
இன்றைய கிழக்குமாகாண சபையில் தமிழ் மக்கள் அரசியல் அனாதைகளாக
கைவிடப்பட்டுள்ள நிலையில்,இவ்வாறான ஒரு முயச்சி மேற்கொள்ள பட்டிருப்பதுஅவர்களை மேலும் விரக்தி நிலைக்கு இட்டுச்செல்லும்.

 காலகாலமாக முஸ்லிம் சமுகத்தின் அரசியல் தலைமைகள் அவர்களின்
இணக்கப்பாட்டு அரசியல் செயற்பாடுகளால் தமது சமூகத்திற்கான மேம்பாட்டைகருத்தில் கொண்டு பல்வேறு அபிவிருத்திகளை முஸ்லிம் சமுகத்திற்கு பெற்றுகொடுத்துள்ளனர்,

 உதாரணமாக ஏறத்தாள இருபத்தையாயிரம் மக்கள் வாழும் ஏறாவூர் நகர பிரதேசசபை இன்று நகரசபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது, ஆனால் முப்பதாயிரம் மக்கள் வாழும் மண்முனைப்பற்று பிரதேசசபை இன்னமும் தரமுயர்த்தப்படவில்லை என்பது
 இங்கு குறிப்பிடத்தக்கது.

 மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதிகளை எடுத்துக்கொண்டால்
அவர்கள் காலகாலமாக எதிர்ப்பு அரசியலையே நடாத்திவந்துள்ளனர், இதன் விளைவு தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.

 புதிய அரசியல் கலாச்சாரத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து இப்பிரதேச தமிழ் மக்களின் அபிவிருத்தியை குறிப்பிட்ட காலப்பகுதியில் மேற்கொள்ள திடசங்கர்ப்பத்துடன் செயற்படும் எனது செயற்பாடுகளுக்கு இவ்வாறான குறுகிய இனரீதியிலான பிரிவுகள் பாரிய சவால்களை ஏற்படுத்துமென்ற விடயத்தை ஜனாதிபதி
 அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.

 புதிய பிரதேச செயலாளர் பிரிவுகள் உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாக இருப்பின் இதற்கு உதாரணமாக இங்கிலாந்து நாட்டின்
Town Councils மற்றும் County Councils என்ற சபை பிரிவுகளை எடுத்துக்கொள்ளலாம், இவை நகர நிருவாகம் மற்றும் கிராமிய நிருவாகம் ஆகியவற்றை வேறாக கையாள்வதற்கு உருவாக்கப்பட்டவை.

 கிராமிய மக்களின் நாளாந்த வாழ்க்கை செயற்பாடுகளும், நகர மக்களின்
செயற்பாடுகளும் தேவைப்பாடுகளும் வௌ;வேறானவை. நகர பிரதேசங்களுடன் கிராமிய பிரதேசங்களை இணைத்து நிருவாக பிரிவுகளை உருவாக்குவதன் மூலம் கிராமியமக்கள் மேலும் பிந்தள்ளப்படுவார்கள்.

 இதனால் அவர்கள் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளில் இருந்து
அன்னியப்படுத்தப்படுவார்கள், எனவே நகர பிரதேசங்களுடன் நகர
பிரதேசங்களையும், கிராமிய மட்டத்திலான விசேட தேவை செயற்பாடுகளை
உள்ளடக்கிய கிராமிய பிரதேச செயலாளர் பிரிவுகளையும் ஏற்படுத்துதல்
சாலச்சிறந்ததாகும்.

 உதாரணமாக கோரளைப்பற்று மத்தி மற்றும் கோரளைப்பற்று மேற்கு இரண்டையும் இணைத்து ஓட்டமாவடி நகர சபையாக உருவாக்கலாம் என்பதுடன் பின்வரும் கோரிக்களையும் நான் ஜனாதிபதி அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

 கோரிக்கைகள்
------------------------------

01. களுவாஞ்சிகுடி மற்றும் ஆரயம்பதி பிரதேசசபைகள் நகரசபைகளாக தரமுயர்த்தப்படல்.

02. ஏறாவூர் பற்றின் எழுவான்கரை பிரதேசங்கள் வேறாக்கப்பட்டு புதிய
செங்கலடி நகரசபை உருவாக்கப்படல்.

03.  கோரளைப்பற்று தெற்கின் எழுவான்கரை பிரதேசமும் வாழைச்சேனையும்
இணைக்கப்பட்டு வாழைச்சேனை நகரசபையாக உருவாக்கப்படல்.

04.  மக்கள் குறைவாக வாழும் ஏறாவூர் பற்றின் உட்பகுதிகளையும், வாகரையில்கோரளைப்பற்று வடக்கின் உட்பகுதிகளையும் உள்ளடக்கிய பிரதேசசெயலாளர்பிரிவுகள் உருவாக்கப்படல்.


என்ற கோரிக்கைகளை ஜனாதிபதி அவர்களின் மேலான கவனத்திற்கு உடனடியாக கொண்டுவந்துள்ளேன்,இம்மக்களின் வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி அவர்கள் சாதகமான ஒரு தீர்வை தருவார் என நான் நம்புகிறேன்.