சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவரும், கிழக்கு மாகாண அமைச்சரும் சந்திப்பு.


(பிரணி)


இலங்கை வந்துள்ள முன்னாள் சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவரும் தற்போது சவுதி அரேபியாவின் எமன் நாட்டுக்கான  தூதுவருமான அலி அல் ஹம்தாஸ் அவர்களை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில்  கடந்த ஞாயிற்றுக் கிழமை சந்திப் பொன்று இடமபெற்றது.


இதன் போது கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி கிராமியக் கைத்தொழி;ல் அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட்டை தூதுவர் கைலாகு கொடுத்து வரவேற்றனர்.

இச்சந்திப்பில் கலந்து கொண்ட நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களும் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களும் தூதுவருடன் பல விடயங்கள் கறத்து உரையாடினர்.

இச் சந்திப்பின் போது தூதுவர் அலி-அல்-ஹம்தாஸ் குறிப்பிடுகையில் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மேலும் வலுப்படுத்தி முன்னெடுக்க வேண்டுமென்றும் இதற்காக சவூதி அரேபிய அரசு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தூதுவர் அமைச்சர் ரவூப் ஹக்கிமிடமும் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடமும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.