இவர்கள் இன்று காலை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து உள்நாட்டு உற்பத்தியிலான மூன்று துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












