(உ.உதயகாந்த்)
அம்பாறை
மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இருந்து இடமாற்றம்
பெற்று சென்ற உத்தியோகத்தர்களுக்கும் கடமையிலிருந்து ஓய்வூ பெற்று சென்ற உத்தியோகத்தர்களுக்குமாக
சேவை நலன் பாராட்டும் நிகழ்வானது அண்மையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கலாசார
மண்டபத்தில் ஆலையடிவேம்பு
பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் தலைவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பிரதேச
செயலாளருமாகிய மதிப்பிற்குரிய வே.ஜெகதீசன்
தலைமையில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
இந்
நிகழ்வின் போது இடமாற்றம்
பெற்று சென்ற உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வூ பெற்று சென்ற உத்தியோகத்தர்களுக்கும் சேவை
நலன் பாராட்டி பரிசுப்பொருட்களும் வாழ்த்துப்பாவும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்
அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் முகமாக வளர்ந்துவரும் உள்ளூர் இளம் பாடகர்களை
கொண்ட ரிதம் இசைக் குழுவினரின் இசை நிகழ்வும்
நடைபெற்றது.


















