ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குட்பட்ட பல பிரிவுகள் வெள்ளத்தால் பாதிப்பு

(வி.சுகிர்தகுமார் & உ.உதயகாந்த்)
ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குட்பட்ட பல பிரிவுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில வீடுகளும் கரைந்து வீழ்ந்துள்ளன.    பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக கணக்காளர் கே.கனகரெத்தினம் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வெள்ள நிலைமையை கண்காணித்து வருவதையும் வெள்ளம் வடிந்தோடுவதற்காக சின்னமுகத்துவார வடிச்சலையும்  மற்றும் பனங்காடு பாலத்தின் கீழாக அடைத்துள்ள சல்வீனியாவை அகற்றுவதற்கான பணிகளில் பாரளுமன்ற உறுப்பினரின் செயலாளரின் உதவியுடன் மேற்கொண்டுள்ளனர்.