அடைமழையால் பொத்துவிலில் பல கிராமம் பாதிப்பு , பாணமையில் 100 குடும்பங்கள் சிக்குண்டுள்ளன

(S Kobenath )
கிழக்கு மாகாணத்தில் கடந்த வாரமாக தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக இன்று பொத்துவில் பிரதேசத்துக்கு அருகாமையில்காணப்படுகின்ற குளங்களின் வான்கதவுகள்; திறக்கப்பட்டமையால் பொத்துவில் பிரதேசத்தை அண்டிய பசறிச்சேனை கிராமம் உட்பட பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பிரதான வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது .




பானமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பெய்துவரும் கடும் மழையைத் தொடர்ந்து ஹெடஓயா, மஹாஓயா பெருக்கெடுத்துள்ளன.

இந்நிலையில் பானமையில் 100 குடும்பங்கள் சிக்குண்டுள்ளனர்.  இவர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுவருகின்றனர்.  
மேலும் லாகுல், பொத்துவில், சியம்பலாண்டுவ, பானமை ஆகிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், இவ்வீதிகளுடனான போக்குவரத்துக்களும்  முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.