கிழக்கு பல்கலைக்கழக தாதியியல் மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு

[எஸ்.கபில்டேவ்]
கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின்மூன்றாம் அணி வெளிவாரி பீ.எஸ்.சி தாதியியல்மாணவர்களை உள்வாங்கும் 
நிகழ்வு

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின்[Faculty of Health-Care Sciences] மூன்றாம் அணி வெளிவாரி பீ.எஸ்.சி தாதியியல்[B.Sc. Nursing external] மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு [23.01.2012] அன்று பீடாதிபதி டாக்டர் கே.இ.கருணாகாரன் தலைமையில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வை அருட்சகோதரி.கலாநிதி.ஜொஸெபா ஜோசேப், தலைவி,பதிலீட்டு விஞ்ஞானங்கள் திணைக்களம்[Department of Supplementary Health Sciences] மற்றும் திரு.எஸ்.சுஜேந்திரன், இணைப்பாளர், வெளிவாரி பீ.எஸ்.சி தாதியியல் கற்கைநெறி, மற்றும் திணைக்கள விரிவுரையாளர்கள் ஆகியோர் நெறிப்படுத்தினர்.இந்நிகழ்வில் பீட விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளிவாரி கற்கைக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வுகளின் நிழல்கள் சில,