இலங்கை இந்து ஸ்வயம்சேவவக சங்கம் சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு விழாவையிட்டு அகில இலங்கை மாநாடு கொழும்பு நாராஹேன்பிட்டிய சாலிகா மைதானத்தில்; ஸ்ரீ பொன்னம்பலவாணேஷஸ்வரார் தேவஸ்தான அறங்காவலரும் விழாக்குழுத்தலைவருமான டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது
இவ் நிகழ்வில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் பூஜ்ய சுவாமி சர்வரூபானந்தாஜி மஹராஜ், இலங்கை சிம்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி தர்ஷன்சைதன்யா ஆகியோர் கலந்துகொண்டு ஆசியரையை வழங்கி ஆரம்பித்துவைதததுடன். பூனே விவேகானந்தா கேந்திர நிலைய சுவாமி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா அகிலபாரத பொதுச் செயலாளர் பேராசிரியர் அனிருத்த தேஷ்பாண்டே, தென்பாரத செயலாளரும் இலங்கைக்கான விசேட பொறுப்பாளருமான எஸ்.ராஜேந்திரன், விஷ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர்
கௌரவ அதிதிகளாக கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமாண், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஊவா மாகாண மின்சக்தி அமைச்சர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார், மத்திய மாகாண கைத்தொழில் கல்வி.தமிழ் இந்து கலாச்சார அமைச்சர் அனுஷியா சிவராஜாஆகியோர் உட்பட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்து சமயங்களின் சங்கங்களின் தலைவர்கள் கலாச்சார பணிப்பாளர்கள் ஆலையங்களின் அறங்காவலர்கள் உள்ளிட்டேர் அதிதிகளாக கலந்துகொண்டனர்
இவ் மகாநாட்டில் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் இலங்கையிலின் தலைநகரில் முதல்முதலில் இந்து சமயத்தவர்கள் ஒன்று கூடிநடாத்தப்பட்ட மாகாநாடு இதுவே முதலாவது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது














