விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து மரணம்


ஏறாவூர் ஐயன்கேணி ரெட்பானாபுரம்  பகுதியிலுள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து குழந்தை ஒன்றின் சடலம் சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கிணற்றிலிருந்து நீரை எடுப்பதற்கு வாளியை கிணற்றினுள் போட்டபோது, குழந்தையின் சடலம் வாளியில் சிக்கியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
பி.விதுஷன என்ற குழந்தையின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் சடலம் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள தென்றும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.