ஏறாவூரில் வீசிய மினி சூறாவளியால் பல வீடுகள் சேதம்!


(தீரன்)
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இன்று பிற்பகல் வீசிய மினி சூறாவளியால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.


மட்டக்களப்பு பகுதியில் இன்று கடும் மழையுடன் கூடிய காற்று வீசியதுடன் ஏறாவூர் நான்காம் குறிச்சிப் பகுதியை  மினி சூறாவளி தாக்கியுள்ளது.
இன்று(11.02.2013) பிற்பகல் 4.30 மணியளவில் வீசிய மினி சூறாவளியால் ஏறாவூர் நான்காம் குறிச்சி, எல்லை நகர் கிராமங்களில் உள்ள பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தென்னை மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

இவ் மினி சூறாவளியால் ஏறாவூர் நான்காம் குறிச்சி, எல்லை நகர் கிராமங்களைச் சேர்ந்த 03இற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 20 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதே நேரம் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளை செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு. உ. உதயசிறிதர் அவர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.