கல்முனையில் மக்கள் சந்திப்பும், எதிர்கால நடவடிக்கைகளும்

கல்முனை மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கல்முனை மக்களுடனான சந்திப்பு இன்று மாலை 4 மணியளவில் கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய முன்றலில் தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் எல்லை காவலன் ஏகாம்பரம் அவர்களின் தலைமையில் நடை பெற்றது.

இந்நிகவுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இராஜேஸ்வரன் அவர்களும், கலையரசன் அவர்களும் கலந்து கொண்டு மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் மாகாண சபை உறுப்பினர்களால் மக்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

கல்முனை வடக்கு வைத்தியசாலை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் மாதர் சங்க உறுப்பினர்களும், சமூக ஆர்வலர்களும் பெருமளவான மக்களும் கலந்து கொண்டனர்.