பொலிஸ் நடமாடும் சேவையினை முன்னிட்டு நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வில் கடல் மீன்கள் சம்பியன்.


(உ.உதயகாந்த்)

தேசத்திற்கு மகுடம் ஏழாவது பட்டாபிஷேகத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் நடைபெற்று வரும் பொலிஸ்  நடமாடும் சேவையின் காத்தான்குடி  பொலிசாரினால் நடாத்தப்படும் நடமாடும் சேவையின்  ஒரு அங்கமாகிய கரப்பந்தாட்ட  விளையாட்டு நிகழ்வானது கல்லடி உப்போடை  கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன  தலைமையில் 24.02.2013 திகதி காலை  10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

இவ் விளையாட்டு நிகழ்வானது பொலிஸ் நடமாடும் சேவையினை நடாத்திக்கொண்டிருக்கும் காத்தான்குடி  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   தெரிவு செய்யப்பட்ட ஒன்பது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இருக்கின்ற விளையாட்டு கழகங்களுகிடையில் நடைபெற்றது.

இறுதியில் மஞ்சந்தொடுவாய் விளையாட்டு கழகமும் திருச்செந்தூர் கடல்மீன்கள் விளையாட்டு கழகமும் மோதிக்கொண்டதில் திருச்செந்தூர் கடல்மீன்கள் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு வீரர்கள் மிகவும் விவேகமாக தமது விளையாட்டு திறனை வெளிக்காட்டி சம்பியன் கிண்ணத்தினை தம்வசப்படுத்தினர்.

மேலும் இன் நிகழ்வில் உரையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் நாளை கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில் மக்கள் நலன்கருதி நடாத்தப்பட விருக்கும் வைத்திய சேவை , பதிவாளர் சேவை, கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்கள் , பொலிஸ்   சான்றிதழ்கள் இன்னும் மேலும் பல சேவைகளை 25.02.2013 திகதி காலை  08.00 மணியளவில்  ஆரம்பிக்கப்படுமெனவும், இன் நிகழ்வில் நாவலடி, புதுமுகதுவாரம், டச்பார், திருச்செந்தூர் , கல்லடி, கல்லடி வேலூர், கல்லடி உப்போடை , நாவற்குடா கிராம சேவகர் பிரிவுகளில் வசிப்பவர்கள் பயன்பெற்று செல்லலாம் என்பதுடன் விரும்பியவர்கள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இரத்த வங்கியிற்கு ''தானத்தில் சிறந்த தானமாம் இரத்த தானம் '' எனவே இரத்த தானத்தினையும் வழங்கலாம் எனவும் கூறினார்.


காத்தான்குடி  பொலிசாரினால் நடாத்தப்படும் நடமாடும் சேவையின் இறுதி  நிகழ்வானது கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன  தலைமையில் 27.02.2013 திகதி நடைபெற இருப்பதாகவும் இன் நிகழ்வின் போது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படுவதுடன் இசை நிகழ்சியும் நடைபெறும் என்பதயும் மகிழ்சியுடன் அறியத்தருகின்றனர்.