திருகோணமலை மாவட்டத்தில் மாகாண விவசாயத் திணைக்களம் ஊடாக சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு


(Chentheepan)சிறந்த விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் அன்புவெளிபுரத்தில் இன்று (28ம் திகதி) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. 

இவ் வைப்பவத்தில் பிரதம அதிதியாகளாக மாகாண விவசாய பணிப்பாளர்  எஸ்.எம்.ஹுசைன்  மற்றும் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஆர். கோகுலதாசன்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

சிறந்த விவசாயிகளாக 6 வேறுபட்ட விவசாய பிரிவின் கீழ் தெரிவான  18 விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் காசோலைகளும் வழங்கிவைத்து கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வானது வருடா வருடம் மாகாண விவசாய  திணைக்களத்தினால் மாவட்ட மட்டத்தில் நடைபெற்றுவரும் நிகழ்வாகும். இதன் மூலம் ஏனைய விவசாயிகளையையும் ஏனையவர்களையும் விவசாயத்தில் ஊக்குவிக்குமுகமாக இந் நிகழ்வு  நடைபெற்றுவருகின்றது என  திருகோணமலை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் மு.குகதாசன்; தெரிவித்தார்.

மாகாண விவசாய பணிப்பாளர் தனது உரையின் போது,  இவ்வாறான நிகழ்வுகளின் மூலம் கிராமங்களிலுள்ள விவசாய உற்பத்திகளைஅதிகரிக்கச் செய்வதனால் கிராம மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்த முடியும் மேலும் இதன் மூலம் தேசிய உற்பத்தியை அதிகரிக்கச் செய்து தேசிய வருமானத்தினை உயர்த்தலாம் இதுவே எமது விவசாய திணைக்களத்தின் குறிக்கோளாகும் என்பதை தெரிவித்தார்.