மட்டக்களப்பில் சுற்றாடல் அதிகாரசபையினால் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!


(தீரன்)
மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையினால் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


டெங்கு நோய் தாக்கத்தை இல்லா தொழிக்கும் நோக்குடன்; மத்தியசுற்றாடல் அதிகாரசபையினால் நடத்தப்பட்டுவரும் டெங்கு ஒழிப்பு வாரத்தை        முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் டெங்கு விழிப்பூட்டல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இதன் ஒருகட்டமாக நேற்றைய தினம்(14.02.2013) மட்டக்களப்பு அரச, தனியார் பஸ் நிலையங்கள், பாடசாலைகள் பிரதான சந்தை போன்ற இடங்களில் பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
இதில் பொதுமக்களுக்கு டெங்கு தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் அதுதொடர்பான துண்டுப் பிரசுரங்களும், சுவரொட்டிகளும் விநியோகிக்கப்பட்டன.

மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி திரு.M. கோகுலன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில், உத்தியோகத்தர்களும், பட்டதாரிப் பயிலுனர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் டெங்கு  சம்பந்தமான விழிப்பூட்டல் நிகழ்வுகள் மற்றும் சிரமதான நிகழ்வுகளை பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.