அம்பாறை - இங்கினியாகல பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசிக்கான மீள் நிரப்பும் கடன் அட்டையை பெற்றுக்கொண்டு ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை கொடுத்து ஏமாற்றிய பௌத்த தேரர் ஒருவரை பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக் தொலைபேசிக் கட்டணங்களை மீள் நிரப்பும் தொலைபேசி நிலையத்தின் உரிமையாளர் இன்று (02) இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து இந்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்படும் பொலிஸாரின் விசாரணையில், குறித்த சந்தேகநபர் அம்பாறையில் உள்ள விகாரையில் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் விரைவில் கைது செய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.













