கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மீது தாக்குதல்


கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினரான பிரியந்த பத்திரன தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணசபைத் தலைவர் ஆரியவதி கலப்பதியின் புதல்வரான சுசந்த கலப்பதியினால் பிரியந்த பத்திரன தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தரப்பினரும் உப்புவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.