(ச.சுரேந்திக்கா) மண்முனை மேற்கு பிரதேசத்தில் கடந்த 2008ம் ஆண்டில் காணிக்கச்சேரி மூலம்
தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு 2008/4 இலக்க காணி ஆணையாளரின்
சுற்றறிக்கைக்கு அமைவாக மண்முனை மேற்கு பிரதேச செயலளாளர் வெ.தவராஜா
அவர்களினால் முதற்கட்டமாக இன்று (5ம் திகதி) 30 பேருக்கு காணி அனுமதிப்
பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. இதன்போது மாவட்ட காணி உத்தியோகத்தர் திருமதி.குகதா ஈஸ்வரன் அவர்களும் மண்முனை மேற்கு பிரதேச குடியேற்ற உத்தியோகத்தர் N.ராஜசேகரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
2008ம் ஆண்டில் காணிக்கச்சேரி மூலம் தெரிவுசெய்யப்பட்ட இக் காணி அனுமதிப் பத்திரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிலே முதலாவதாக வழங்கப்பட்டுள்ளதனை எம்மால் அறிய முடிகின்றது. மேற்படி காணிப் அனுமதிப் பத்திரங்கள் கிடைக்காமல் பல வருட காலமாக காத்துக் கொண்டிருந்த மக்கள் இன்று மிக மகிழ்ச்சியுடன் பிரதேச செயலாளரிடமிருந்து காணிப் அனுமதிப் பத்திரங்களை பெற்றுச் சென்றனர்.




















