
மட்டக்களப்பு கரித்தாஸ் எகேட் நிறுவகத்தின் அனுசரணையுடன் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்தின் புச்சாக்கேணி கிராமத்தில் வசிக்கும் யுத்தம், போரினால் பாதிக்கப்பட்டு எதுவித உதவிகளும் பெறாத பெண்கள் தலைமை தாங்கும் 24 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கரித்தாஸ் சுவிஸ் நிதியுதவியுடன் வழங்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்டமாக வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு பயனாளிகள் இல்லத்தில் நடைபெற்றது.
இதற்கு சிறப்பு அதிதிகளாக கரித்தாஸ் எகேட் நிறுவக இயக்குனர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன்இ வாகரை கதிரவெளி இராணுவ அதிகாரி கெப்டன் சந்தனஇ கதிரவெளி பொலிஸ் அதிகாரி சசிகுமார்இ புச்சாக்கேணி கிராம சேவை உத்தியோகஸ்தர் விஜயகுமார்இ கிராம முன்னேற்ற சங்க தலைவர்இ செயலாளர்இ மாதர் முன்னேற்ற சங்க தலைவர்இ செயலாளர்இ ஓமடியாமடு கிராம சேவை உத்தியோகஸ்தர் இ கிராம மக்கள்இ நிறுவக உத்தியோகஸ்தர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வீடுஇ மலசலகூடம் போன்றவைகள் வழங்கப்படவுள்ளன.ஒரு வீட்டின் பெறுமதி ஐந்து இலட்சத்து எண்பதாயிரம் ரூபாயாகும் என கரித்தாஸ் எகேட் நிறுவ ஊடகப்பிரிவு பொறுப்பாளர் மைக்கல் தெரிவித்தார்.
