(ச.சுரேந்திக்கா) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ளது மட்/வேப்பவெட்டுவான் அ.த.க பாடசாலை. இப் பாடசாலை அமைந்துள்ள பிரதேசம் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகும்.
இப் பாடசாலையில் இறுதியாக 1989ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி நடை பெற்றதாகவும், அதாவது 24 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதன் பின்னர் இவ்வாண்டு இடம்பெறுகின்றது. விவ் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் ந.ரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் நேற்று 21ம் திகதி மிக சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் G.சிறிநேசன் அவர்களும் மற்றும் சிறப்பு அதிதியாக ஏறாவூர் பற்று மேற்கு பிரதேச கல்விப் பணிப்பாளர் S.முருகுப்பிள்ளை அவர்களும் கலந்து கொண்டனர்.
இவ் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தமது வாழ்வில் முதலாவதாக பங்குபற்றிய விளையாட்டு இதுவென நினைத்து முகமலர்ச்சியுடன் காணப்பட்டனர். இதேபோன்று பெற்றோர்களும் மிக உற்சாகத்துடன் வருகை தந்திருந்தனர். மேலும் இதன்போது அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் வருகைதந்திருந்தனர்
.
.
Video:






















