தூக்கில் தொங்கிய நிலையில் கணவன் மனைவியின் சடலம் மீட்பு

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனைப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் கணவன் மனைவியின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்று காலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நொச்சிமுனை,இசைநடனக்கல்லூரி  வீதியில் உள்ள வீட்டில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 மீட்கப்பட்ட சடலம் குறித்த வீட்டை சேர்ந்த தயாளன்(34வயது)அவரது மனைவியான கஜேந்தினி தயாளன்(32வயது) என அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இவர்களுக்கு ஆறு வயதில் மகன் ஒருவனும் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்