மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் தரம் 5 புலமைப்பரிசில் வெற்றியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் தரம் 5 புலமைப்பரிசில் வெற்றியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை காலை கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வலயத்தின் அழகியல், தொழில் வழிகாட்டல் பிரிவினர் ஒருங்கிணைப்பு செய்துள்ளனர்.
நிகழ்வில் பிரதம அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும், பொட்சுவானா பல்கலைக்கழக கல்வி ஆய்வு நிபுணத்துவ ஆலோசகருமான கலாநிதி கோ.கோணேசப்பிள்ளை மற்றும் கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன் ஆகியோரும் கலந் கொள்கின்றனர்.
சிறப்பு அதிதிகளாக வேல்ட் விசன் ஏறாவூர் பற்று ஏ.டி.பியின் முகாமையாளர் ஏ.ரவீந்திரன், பட்டிப்பளை ஏ.டி.பி யின் முகாமையாளர் ஜீ.ஏ.அனுராhஜ் ஆகியோருமு; கலந்து கொள்கின்றனர்.
வலயத்தின் பாடசாலை மாணவர்களின் நடனம், பேச்சு, நாடகம், சிறுவர் நாடகம், என பல்வேறு கலை நிகழ்வுகளுடன் இக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.












