தேசத்திற்கு மகுடம் (தெயட்ட கிருல்ல) திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பிராந்தியத்தில் உள்ள நான்கு ஆதார வைத்தியசாலைகளிற்கும் அம்பியுலன்ஸ் வண்டிகள் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.
அதனை வைத்தியசாலைகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வுகள் (25.03.2013) இடம்பெற்றன. காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கான அம்பியூலன்ஸ் வாகனத்தினை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.கு.சிப்லி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சதுர்முகம் நிர்வாக உத்தியோகத்தர் ஆ.நவேஸ்வரன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.












